You are here : worship

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




மரத்தில் தானாக தோன்றிய பிள்ளையார்!

2019-10-16


ஹாலிஎல அந்துட்டுவாவெல பகுதியிலிருந்து இரண்டு கிலோ மீற்றர் தெலைவில் அமைந்துள்ள சிற்றூர் குயின்ஸ்டவுன்.


இத்தோட்டத்தின் கீழ்ப் பிரிவில் அமைந்துள்ள கிருபானந்தவாரியார் தமிழ் வித்தியாலயத்திற்கு அருகில் சுயம்பாக பிள்ளையார் வடிவம் ஒன்று தோன்றியுள்ளது.


இவ்பாடசாலைக்கு அருகிள் உள்ள பழமையான மரத்தின் வேர்களே பிள்ளையார் வடிவத்தை  உருவாக்கியுள்ளன. கடந்த ஒகஸ்ட் மாதம் அவ்வூரில்  இடம்பெற்ற ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் தீச்சட்டி உற்சவத்தின் போதே தீச்சட்டிக் கரகத்தை ஏந்தி வந்த முதியவரான சிவசாமி என்பவர் இவ்வடிவத்தைக் கண்டுள்ளார்.
அதனையடுத்து ஊர் மக்கள்  மர வேரில் உள்ள பிள்ளையார் வடிவத்தை வழிபட தொடங்கியுள்ளனர். 


அத்தடன் இவ் அற்புத பிள்ளையாரை தரிசிக்க பல ஊர்களில் இருந்தும்  மக்கள்  வந்தவண்ணம் உள்ளனர்.


இச் சுயம்புப் பிள்ளையாரின் உருவாக மரமானது பிரித்தானியர் ஆட்சி காலத்தில் இந்தியாவிலிருநடது கொண்டு வரப்பட்டு வளர்க்கப்பட்டதாக கூறுப்படுகின்றது. மே மாதத்தில் பூக்கும் இவ் மரத்திக் அழகிய சிவப்பு நிறப் பூக்கள் மே மலர்  என அழைக்கின்றது.