You are here : life

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




சித்ரா பவுர்ணமியில் பாவம் போக்கும் சித்ரகுப்தன் வழிபாடு!

2019-04-19



சித்திரை மாதம் பவுவர்ணமி, திதியில், சித்திரை நட்சத்திரமும் கூடி வருவருதால் இன்றைய தினம் சித்திரா பவுர்ணமி என அழைக்கப் பெறுகின்றது


சித்ரா பவுர்ணமி நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவார்கள். சித்திரை மாதத்தில் பவுர்ணமி அன்று சிவபெருமாள்- பார்வதியால் உருவாக்கப்பட்டவர் தான் சித்திரைகுப்தன். மனிதர்கள் செய்யும் பாவ, புண்ணிய கணக்குகளை எழுதபடைக்கப்பட்ட சித்திர குப்தனை வேண்டிக் கொண்டு பெரும் பாலும் பெண்களே சித்ரகுப்தன் விரதம் மேற் கொள்கின்றனர். 


சித்ரா பவுர்ணமி தினத்தில் சித்தர குப்தனைப் போல் மாக்கோலம் போட்டு ஏடு எழுத்தாணி வைத்து விளக்கேற்றி பூஜை செய்து பொங்கலிட்டு வழிபடுவர். பாவங்களிலிருந்து விடுபடவும் நரகத்திற்கு போகாமல் இருக்கவும் இந்த விரதம் மேற்கொள்கின்றனர். அத்துடன் இரவு நேரத்தில் சித்தரபுத்திர நாயனார் கதையும் சொல்வதுண்டு.


சித்ரா பவுர்ணமி சித்திரகுப்த நாயனார்


புராணக் கதைகளின்படி, மனிதர்களின் பாவ, புண்ணியக் கணக்குகளை எழுதும் சித்ர குப்தன் அவதரித்த நாள் சித்ரா  பவுர்ணமி தான். அவர் சிவன் வடித்த சித்திரத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டதாலும், சித்திரை மாதத்தில் பிறந்ததாலும் சித்ர குப்தன் என்று அழைக்கப்படுகிறார்.

  
சித்திரா பவுர்ணமி சித்திர குப்தன் பிறந்தநாளாக கொண்டாடப்படுவது பற்றி இரண்டு புராண கதைகள் கூறப்படுகின்றன. மனிதர்களின் ஆயுட்காலம் முடிந்ததும். அவர்களின் உயிர்களை எடுப்பவர் எமதர்மராஜா. அவரவர் செய்த பாவ, புண்ணியத்திற்கேற்ப தண்டனைகளையும் கொடுத்து வந்தார் அவர். அவர் ஒரு முறை மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமானை சந்தித்து தனது பணிகளில் தனக்கு உதவியாக ஒருவரை அளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். சிவபெருமானும் படைக்கும் கடவுளான பிரம்மாவிடம் கூறி ஒருவரை படைக்க வைத்தார். சித்ராபவுர்ணமியன்று படைக்கப்பட்டு அன்று பிறந்ததால் அந்தகுமாரனுக்கு சித்ரகுப்தன் என்று பெயரிடப்பட்டது என ஒரு கதையில் கூறப்படுகிறது.


மற்றொரு கதை: ஒரு முறை இவ்வுலகின் பாவ புண்ணி பலனை அறிய சிவபெருமான் பார்வதி தேவியின் மூலம் தங்கப்பலகை கொண்டு வரச் செய்து அதில் சித்திரம் அமைத்தார். இதனை கண்டு அதிசயித்த பார்வதி இந்த சித்திரத்தை பேச வைக்க சிவனிடம் வேண்டினார். தனது மனைவியான பார்வதி தேவியை ஆச்சர்யப்பட வைக்க வேண்டும் என்பதற்காக  சிவனும் மந்திர உபதேசம் செய்து அந்த சித்திரத்திற்கு பேசும் சக்தியை கொடுத்து சித்ரபுத்திரன் என்ற பெயரும் வைத்தார். இந்த சித்திர புத்திரன் (சித்ரகுப்தன்) சித்ரா பவுர்ணமி தினத்தில் அவதரித்தார். அண்ட சராசரங்களிலுள்ள முன்னாள் கணக்குகளையும், பிரம்மா விஷ்ணு முதலானவர்களுடைய பாவ புண்ணிய கணக்குகளையும் தினமும் தமக்குத் தெரிவிக்கும்படி உத்தரவு பிறப்பித்திருந்தார். அத்துடன் இவரை எமதர்மராஜனுக்கு உதவி செய்ய சிவபெருமான் அனுப்பி வைத்தார் என கூறப்படுகிறது. எமதர்மராஜனிடமிருக்கும் சித்ரகுப்தன் மனிதர்கள் செய்யும் பாவ, புண்ணிய கணக்குகளை குறித்து வைத்து அவரவர் செய்த பாவ, புண்ணியத்திற்கேற்ற பலன்களை எமதர்மனிடம் கூறி நிர்ணயிக்கிறார். என கூறப்படுகிறது. 


சித்ரகுப்தன் பூஜை


சித்ரா பவுர்ணமி தினத்தில் நாம் எளிமையாக ஒரு கலசம் அல்லது விக்ரகத்தின் சித்ரகுப்தனை ஆவாஹனம் செய்து கீழ்கண்ட ஸ்லோகத்தை கூறி சித்ரகுப்தனை வழிபட்டால் சித்ரகுப்தனின் அருள் கிடைக்கும்.


சித்ரகுப்தம் மஹா ப்ராக்ஞம்,
லேகணீபத்த தாரிணம்
சித்திர ரக்னாம்பரதரம்
மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம்


இதன் பொருள்: சிறந்த அறிவும், ஞானமும் கொண்டவரும், எழுத்தாணி, ஏடு ஆகியவைகளை கைகளில் வைத்திருப்பவரும், அழகிய ரத்தினத்தலான உடையை அணிந்திருப்பவரும், எல்லா உயிர்களுக்கும் நடுநிலைமையுடன் நீதி அரசராக விளங்குவரான சித்ரகுப்தரே உமக்கு நமஸ்காரம். 


என்ற சித்ரகுப்தனின் ஸ்லோகத்தை தியானம் செய்து தீபம், தூபம் மற்றும் பூக்களால் அர்ச்சிப்பதுடன், நாம் செய்த தவறுகளை மன்னிக்க மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். வாசனைப் பொருள் கலந்த சாதம் நைவேத்தியம் செய்ய வேண்டும். 


ஒவ்வொரு சித்ரா பவுர்ணமி அன்றும் பாவ புண்ணிய கணக்குகள் எழுதப்படுகிறது. விரதத்தை ஆரம்பித்து சித்ர குப்தாய என்று சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். பவுர்ணமி நிலவு உதயமானதும் சித்ரகுப்தனுக்கு பூஜை செய்ய வேண்டும். 


மேலும் இந்த நாளில் உப்பு, பசும்பால், தயிர் இவைகளை நீக்கி நாம் விரதம் இருப்பதுடன் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்தால் சித்திரகுப்தன் நம் பாவ புண்ணிய கணக்கை எழுதும் போது புண்ணிய கணக்கை அதிகப்படுத்தியும் பாவத்தை குறைத்தும் எழுதுவார் என்று நம்பப்படுகின்றது.