October 01, 2014
தரையிலும் மரத்திலும் வேலிகளிலும் படர்ந்திருக்கும். சிறிது தடிப்பும், மேல் புறத்தில் வழவழப்பும் நல்ல கரும்பச்சை நிறத்திலும் மிக மென்மையாகவும் இதன் இலைகள் காணப்படும். கரும்பச்சை நிறமான காய்; கண்களை கவரும் நல்ல சிவப்பு நிறத்திலான பழம்; பழத்தின் தோல் மிக மென்மையானது. பழச்சதை மஞ்சள் கலந்து சிவப்பு நிறமும் இனிப்பு சுவையுமுடையது. விதைகள் அதிகமுண்டு. இது பல்லாண்டுகாலம் உயிர் வாழும். கிழங்கு, இலை, காய், வேர் ஆகியவை உணவாக உட்கொள்ளத் தக்கவையாகும். இளம் பிஞ்சுகளை எலுமிச்சம்பழச்சாற்றில் ஊறவைத்தும் சாப்பிடலாம். கொவ்வைப்பழங்களை கொத்தமல்லி, தக்காளி, தேங்காய் சேர்த்து சட்னி செய்தும் உண்ணலாம். இதனால் உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். சிறுநீரக கோளாறுகள் தீரும். இதன் வேரை உலர்த்தி பொடி செய்து வெந்நீருடன் குடித்தால் மலத்தை இளக்கும். இளங்காயை வாயிலிட்டு மென்று துப்ப - நாக்கின் புண்கள் நீங்கும். இலையை நறுக்கித் தண்ணீர் சேர்த்துக் காய்ச்சி குடிநீராக்கி கொடுக்க கண் எரிச்சல், நீரடைப்பு, சொறி, சிரங்கு தீரும். கொவ்வை வேர்க்கிழங்கின் சாறு நீரிழவு நோயாளிகளுக்கு கொடுக்கலாம். கொவ்வை இலைகளை வேப்பெண்ணெயில் வதக்கி வீக்கத்தின் மேல் வைத்து கட்டினால் எவ்வகையான வீக்கமானாலும் வாடிவிடும். இவ்வாறு மிகுந்த மருத்துவக் குணம் மிக்க கொவ்வை செடியின் பாகங்கள் அனைத்தும் உணவாகப் பயன்படுத்தத் தக்கவையாகும். கொவ்வைக்காய்ப்பொடி, கொவ்வைக்காய் கறி, கொவ்வைக்காய் பொரிச்ச குழம்பு, கொவ்வைக்காய் பச்சடி, கொவ்வைக் கொடி ரசம், கொவ்வைக்காய் பொரியல், கொவ்வைக்காய் வற்றல் போன்ற உணவு வகைகள் ஊடாக கொவ்வையை உட்கொள்வதால் நோயற்ற வாழ்க்கை வாழ்வதற்கு இக்கட்டுரை வழிகாட்டுகின்றது.