You are here : features

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




ஆன்மீக கேள்வி பதில்

2019-03-28


1.கேள்வி :- நவகிரகங்களைப் படைத்தது யார்? அவற்றைப் படைத்ததன் காரணம் என்ன? 
பதில் :-  நாம் வாழுகின்ற பூமியைப் படைத்தது யாரோ, அவரே நவகிரகங்களையும் படைத்திருக்கிறார். என்பதால் தான் கிரகங்களைப் பற்றிய கல்வியினை ஜ்யோதிஷம் என்று சொல்கிறார்கள். இந்த பூமியில் வாழுகின்ற மனிதர்கள் அவரவர் செய்த பாவ, புண்ணியத்திற்கு ஏற்ப பலன்களை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவும்,  அந்தப் பலன்களைத் தருகின்ற பணியாளர்களாக நவகிரஹங்கள் செயல்பட வேண்டும் என்பதற்காகவும் படைக்கப்பட்டன.


2.கேள்வி :- துல்லியமானது வாக்கியம் பஞ்சங்கமா – திருக்கணித பஞ்சாங்கமா? 
பதில் :-  எதிர்கால பலன்கள் துல்லியமாக அறிய திருக்கணித பஞ்சாங்கம் சிறந்தது. 
இறைவனை வணங்குவதற்கு என்று கால நேரம் ஏதும் தனியாகக் கிடையாது. 


3.கேள்வி :- அதிகாலையில், அந்திமாலையில் எப்போது இறைவனை தரிசிப்பது சிறந்தது? 
பதில் :-   நாம் நினைத்த மாத்திரத்தில், நினைக்கின்ற இடத்திலிருந்தே இறைவனை வணங்கலாம். உங்களுடைய வினா ஆலயத்திற்குச் சென்று இறைவனை தரிசிப்பதற்கு உகந்த நேரம் எது என்ற பொருளோடு கேட்கப்பட்டிருந்தால், அதற்கும் கால நேரம் என்பது எதுவும் கிடையாது என்பதே தெளிவான விடை ஆகும். இது அவரவர் மனோநிலையைப் பொறுத்தது. முழுமையான ஈடுபாட்டோடும் இறைவனை தரிசிக்க வேண்டும் என்பதே சரியானது. 


4.கேள்வி :-  ஸ்ரீ சக்கரத்தை டாலராக செய்து கழுத்தில் அணியலாமா ?
பதில் :-   ஸ்ரீ சக்கரத்தை டாலராக கழுத்தில் அணியலாம். இரவில் கழுத்தில் அணியக் கூடாது. தீட்டு உள்ள வீட்டுக்குள் செல்லக் கூடாது. ஸ்ரீசக்கர மந்திரத்தை தினமும் ஜபிக்க வேண்டும்.


5.விலங்குகளுக்கும் மனிதர்களைப் போல் இறை பக்தி உண்டா?  
உண்டு என்பதையே நம் புராணங்கள் அறுதியிட்டுச் சொல்கின்றன.விலங்குகளால் பூஜை செய்யப்பட்ட ஸ்தலங்களைப் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது.
இவற்றை விட அன்பு இருக்கும் இடத்தில் நிச்சயமாக ஆண்டவன் இருப்பான். அன்பே சிவம் என்ற தத்துவம் அதனை அறுதியிட்டுச் சொல்லும்.  விலங்குகள் மட்டுமல்ல தொட்டியில் வளர்க்கப்படும் மீன் இனங்களுக்குக் கூட தனது எஜமானனின் மேல் அன்பு செலுத்தத் தெரியும். அன்பு என்பதே கடவுளின் உருவம் என்பதாலும், விலங்குகளுக்கும் அன்பு செலுத்தத் தெரியும் என்பதாலும், விலங்குகளுக்கும் இறைபக்தி என்பது நிச்சயம் உண்டு என்ற கருத்தினை ஏற்றுக் கொண்டு தான் ஆகவேண்டும்.