You are here : archaeology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




ஐந்து அதிசயங்களை உள்ள‍டங்கிய ஆயிரமாண்டு ஆலயம்!

2019-04-03


 

இந்தியாவின் கோயம்புத்தூரில் இருந்து மேற்கு திசையில்  ஆறு கிலோமீட்ட‍ர் தொலைவில் உள்ள‍  "பேரூர் " என்னும் இடத்தில் அமைந்துள்ளது மேல சிதம்பரம்  என்றும் அழைக்கப்படும் பட்டீஸ்வரர் சிவாலயம். இவ் ஆலயம் சமயக்குரவர் நால்வரால் பாடல்பெற்ற‍ சிறப்பினை கொண்ட ஆலயமாகும்.


"நடராஜப்பெருமான்" ஆனந்த தாண்டவம் ஆடியபோது அவர் காலில் அணிந்திருந்த சிலம்பு தெறித்து விழுந்த இடமே இவ் ஆலயம் அமைந்துள்ள இடம் என செவிவழிச் செய்தியும் உண்டு.

இன்றும் விஞ்ஞானிகளினாலும் மெஞ்ஞானிகளாலும் விடைக்காணமுடியாத  ஐந்து அதிசயங்கள் இவ் ஆலயத்தில் உள்ளது.
அவை
இறவாத “பனை",
பிறவாத “புளி,"
புழுக்காத “சாணம்,"
எலும்பு “கல்லாவது,"
"வலதுகாதுமேல் நோக்கிய நிலையில் இறப்ப‍து."

இவ் ஐந்த அதிசயங்களும் 

இறவாத பனை:-
பல ஆண்டுகாலமாக இன்றும் பசுமை மாறாமல் இளமையாகவே ஒருபனைமரம் நின்று கொண்டிருக்கிறது. இந்த மரத்திற்கு இறப்பென்று எப்போதுமே கிடையாதாம்.

பிறவாத புளி:-
அடுத்து "பிறவாதபுளி," என்று போற்ற‍ப்படும் "புளியமரம்" இங்கு இருக்கிறது. இந்த "புளியமரத்தின்" கொட்டைகள் மீண்டும் முளைப்ப‍தேயில்லையாம்.
"புளியம்பழத்தின்" கொட்டைகளை மீண்டும் முளைக்க‍ வைப்ப‍தற்காக விஞ்ஞானிகள் பலரும் எவ்வ‍ளவோ முயற்சி செய்த போதும் அது முளைக்க‍வே இல்லை. இந்த "புளியமரம்" இந்த பிறவி மட்டுமே என்று வரம் வாங்கி வந்துள்ள‍தாம். அதனால் "பிறவாத புளி "என்று அழைக்கிறார்கள்.

புழுக்காத சாணம்,:-
மூன்றாவதாக புழுக்காத "சாணம்," கோயில் இருக்கிற "பேரூர்" எல்லைக் குட்பட்ட‍ பகுதிகளில் . . .ஆடு, மாடு போன்ற கால் நடைகளின் "சாணம் " மண்ணில் கிடந்தால் . . . எத்த‍னை நாட்கள் ஆனாலும் அவற்றிலிருந்து புழுக்க‍ள் உண்டாவதே இல்லையாம்.

மனித எலும்புகள் கல்லாவது:
இங்குள்ள‍வர்களில் யாரேனும் இறந்து விட்டால் அந்த உடலை எரித்த‍ப் பிறகு மிச்ச‍மாகும் எலும்புகளை . . .இந்த ஆத்மா புண்ணியம் பெறவேண்டும் என்பதற்காக இங்குள்ள‍ நொய்யால் ஆற்றில் விடுவார்களாம். அப்ப‍டி ஆற்றில் விடப்படுகிற "எலும்புகள் "சிறிது காலத்தில் "கற்களாக உருமாறி" கண்டெடுக்க‍ப்படுகிறதாம்.

த‌மது வலது "காதை" மேல் நோக்கி வைத்த‍படி மரணிப்ப‍து:-
ஐந்தாவதாக "பேரூரில்" மரணமடையும் மனிதன் முதல் அனைத்து ஜீவராசிகளும் இறக்கும் தருவாயில் தமது "வலது காதை" மேல் நோக்கி வைத்த‍படிதான் மரணம் அடைகின்ற அதிசயமும் இங்கு இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.இந்த அதிசயங்களை நடத்திக் கொண்டிருக்கின்ற "பட்டீஸ்வரர்," . . .