You are here : News

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




நீரவியடிப் பிள்ளையார் கோவிலில் கொடும்பாவி எரித்தலுடன் வழிபாடு ஆரம்பம்!

2019-10-14


நீரவியடிப் பிள்ளையார் கோவிலில் அபிசேக வழிபாடு, கொடும்பாவி எரிக்கப்பட்டு விசேட சாந்தி பூசைகளும் இடம்பெற்றது.


முல்லைத்தீவு - நாயாறு நீராவியடிப்பிள்ளையார், கோவில் வளாகத்தில் அத்துமீறித் தங்கியிருந்த பௌத்த பிக்கு  கடந்த மாதம் மரணமடைந்த நிலையில். அந்தப் பிக்குவினுடைய உடலை நீதிமன்ற உத்தரவினை மீறி, நீராவியடிப்பிள்ளையார் கோவில் வளாகத்தில் தகனம் செய்திருந்தனர்.


இவ்வாறு இடம்பெற்ற  துர் சம்பவத்தையடுத்து, விசேட சாந்தி பூசை நிகழ்வொன்றை 11 ஆம் திகதி (11.10.2019)  நீராவியடிப்பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினர் ஒழுங்குசெய்திருந்தனர்.


இதன் போது விசேடமாக விநாயகருக்கு அபிசேகங்கள் இடம்பெற்றதுடன், பிக்குவினுடைய உடல் தகனம் இடம்பெற்று, கோவில் வளாகம் அசுத்தப்படுத்தப்பட்டதால், அதை நிவர்த்தி செய்யும்பொருட்டு கொடும்பாவி கட்டி இழுக்கப்பட்டு, எரிக்கப்பட்டு விசேட சாந்தி பூசை நிகழ்வுகளும் இடம்பெற்றன.


அத்துடன் அசுத்தப்படுத்தப்பட்ட  கோவில் வளாகம் மற்றும், கோவில் தீர்த்தக் கேணி வளாகம் என்பவற்றைத் தூய்மைப்படுத்தும் நோக்கில், மஞ்சள் கலந்த நீர் தெளிக்கப்பட்டு பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டன