You are here : Kovils

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS
முத்­தலச் சிறப்­புக்­க­ளுடன் முகிழ்ந்து நிற்கும் முன்­னேஸ்­வரம்

2019-08-28


இந்து மதத்தின்  சிறப்­புக்­க­ளையும், பாரம்­ப­ரிய பண்­பாட்டு கூறு­க­ளையும் கோடிட்டு காட்டும் திருத்­த­ல­மாக, ஆன்­மிக சுட­ராக பிர­கா­சித்து நிற்­கின்­றது  முன்­னேஸ்­வர முன்­னை­நாதப் பெருமான் தேவஸ்­தானம். இவ்­வா­ல­யத்தின் வரு­டாந்த திரு­விழா கடந்த  17ஆம் திகதி சனிக்­கி­ழமை கொடி­யேற்­றத்­துடன்  ஆரம்­ப­மா­னது. எதிர்­வரும்  13 ஆம்  திகதி  தீர்த்­தோற்­ச­வத்­துடன் விழா நிறைவு பெறும். 


இங்கு வீற்­றி­ருக்கும் இறை­வனை ஸ்ரீமுன்­னை­நாதர் எனவும் இறை­வியை ஸ்ரீவ­டி­வ­ழகி எனவும் அதன் தலப்­ பெ­ருமை அர­ச­ம­ர­மெ­னவும் விதந்­து ­ரைக்­கப்­ப­டு­கின்­றது. தென்­னி­லங்­கையில் மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்­றையும் முறை­யா­க  கொண்ட தல­மாக இந்த முன்­னேஸ்­வரம் விளங்கி  ஆன்­மிக ஒளி­ப­ரப்பி நிற்­கின்­றது.  அறு­பத்து நான்கு சக்தி பீடங்­களில் இது ஒன்­றெ­னவும் இலங்­கையை ஆண்­ட­ அ­ர­சர்கள்  வழி­பட்டு முத்தி பெற்­ற­தா­கவும் தட்­ச­ண ­கை­லாய புராணம் எடுத்துச் சொல்­கி­றது.


அத்­துடன் இவ்­வா­ல­ய­மா­னது இரா­மா­யணம், மகா­பா­ரதம் போன்ற இதி­காச கதைப்­பின்­ன­லுடன் தொடர்­பு­பட்­டுள்­ள­தா­கவும் அறி­ய­மு­டி­கின்­றது. 


இரா­ம­பிரான் இலங்கை வந்து இரா­வ­ணனை சம்­ஹாரம் செய்து இவ்­வா­ல­யத்தின் ஊடாக கடக்க நேர்ந்­ததாம். அப்­போது இரா­ம­பி­ரானை பிடித்­தி­ருந்த “பிரம்­ம­ஹத்­தி­தோஷம்” நீங்­கி­ய­தா­கவும் இரா­ம­பிரான் இவ்­வா­லய சிறப்பை உணர்ந்து பிர­திஸ்டை செய்து பூஜை வழி­பா­டுகள் மேற்­கொண்­ட­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது.


 

இவ்­வா­ல­யத்தை ஆறா­வது பராக்­கி­ரம மன்னன்(கி.பி.1410- –1462) அதே­போல ஒன்­ப­தா­வது பராக்­கி­ர­ம­பாகு(கி.பி.1509- –1528) போன்ற மன்­னர்­களும் இவ்­வா­லய அருமை பெரு­மை­களை உணர்ந்து ஆலயத் திருப் ­ப­ணிகள் புரிந்­துள்­ளனர். 


இவ்­வா­ல­யத்தின் முக்­கிய சிறப்­பம்சம், ஆறு­கால நித்­திய பூசைகள் ஆகம முறைப்­படி  நிகழ்­வு­று­வதைக் காணலாம். 

 

இராஜகோபுரம் 

ஆலய பஞ்சதள(5தளம்) கொண்ட இராஜகோபுரம்  புதிதாக நிர்மாணிக்கப்பட்டு 2018 ஆம் ஆண்டில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.

 

 


உற்­ச­வங்கள்

முன்­னேஸ்­வர திருத்­த­லத்தில் மட்­டுமே 63 நாயன்­மார்­க­ளுக்கு விழா எடுத்து பெறு­மைப்­ப­டுத்தும் நிகழ்­வாக இருக்­கின்­றது. 28 தினங்­க­ளாக கொண்­டா­டப்­பட்டு வரும் இவ்­வா­லய உற்­ச­வங்­களில் ஆறு விழாக்கள் முக்­கிய இடம் வகிக்­கின்­றன.

 

அவ்­வ­கையில் எதிர்­வரும் 08ஆம் திகதி மாலை 6.00மணிக்கு தீமி­திப்பு விழாவும், 09ஆம்  திகதி பிச்­சா­டன உற்­ச­வமும், 10 ஆம்  திகதி  நடேசர் நிகழ்வும், 11 ஆம்  திகதி மாலை 6.00க்கு வேட்­டைத்­தி­ரு­ வி­ழாவும்  12 ஆம்  திகதி  தேர்த்­தி­ரு­வி­ழாவும், 13  ஆம்  திகதி  தீர்த்­தோற் ­ச­வமும்  நடை­பெறும். 


தென்­னி­லங்­கையில் ஆன்­மிக சுடர் விட்டு பிர­கா­சிக்கும் இவ்­வா­ல­ய­மா­னது தமிழ்- சிங்­கள மக்­களின் ஒற்­று­மையின் சின்னம், ஈரின மக்­க­ளி­டையே  உற­வுப்­பாலம் அமைக்கும் தலம். இது சகோ­தர நேயத்தை பறைசாற்றுவதுடன்  பூசை வழிபாடுகள் கலாசாரத்துடன்  பின்னிப் பிணைந்து   இன ஒற்றுமையை  வலியுறுத்துவதுடன்  புண்ணிய பூமியாக முகிழ்ந்து நிற்கின்றது.


உறவைக் கட்டிக்காக்கும் இவ்வாலய விழாவில் கலந்து கொண்டு நாமும் அருட் கடாட்சம் பெற்று உய்வோமாக.