You are here : Kovils

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS
நாளை கும்­பா­பி­ஷேக பெரு­விழாக் காணும் தென்னமரவடி வரசித்தி விநாயக பெருமான் ஆலயம்

2019-08-27


''ஆனை­மு­க­னே­ஆ­தி­மு­த­லா­ன­வனே

பானை­வ­யிற்­றோ­னே­ பக்­தர்­களைக் காப்­ப­வனே

மூலப்­பொ­ருளே மூத்­த­வ­னே ­க­ணேஷா

ஏனென்­று­ கே­ளு­மைய்யா இந்த

ஏழை­முகம் பாரு­மைய்யா''

என்னும் பாடல்­வ­ரிகள் விநா­யகப் பெரு­மா­னு­டை­ய­ தோற்றப் பொலி­வை­ நெஞ்சில் பதித்­து­வி­டு­கின்­றது. விநா­ய­கரின் அருள் வேண்­டி ­வ­ழி­படும் பக்­தர்­க­ளுக்கு அப­ய­கரம் காட்­டி­நிற்கும் மூலப் பரம்­பொருள் வர­சித்­தி­வி­நா­ய­கரின் பொற்­பா­தங்கள் பதிந்­தி­ருக்கும் தென்­ன­ம­ர­வடித் திருத்­த­லத்தில் 28.08.2019 அன்­று ­கும்­பா­பி­சேகத் திரு­விழா நடை­பெறத் திரு­வருள் கூடி­யுள்­ளது. பாண்­டிய மன்­னர்­களின் மர­பினர் வாழ்ந்­தி­ருந்த பிர­தேசம் என்­பதால் இப்­பெயர் வந்­தது என்பர். தென்னன் மரபு அடி என்னும் பெயர் காலப்­போக்கில் தென்­ன­ம­ர­வடி என ­ம­ரு­விற்று. இவ்­வா­ல­யத்தின் கட்­டு­மா­னங்­களில்கூட பாண்­டிய மன்­னர்­களின் செல்­வாக்கு காணப்­பட்­டி­ருந்­த­தாக முன்னோர் கூறுவர். 

இக்­கி­ரா­மத்தைப் 

பற்­றிய சில செய்­திகள்

தென்­ன­ம­ர­வடி ஓர் குக்­கி­ராமம். திரு­கோ­ண­மலைப் பட்­டி­னத்திலிருந்து வடக்­கு­ நோக்கி 72 கிலோ மீற்றர் தொலைவில் சுமார் 75 குடும்­பங்­களே வாழ்ந்து கொண்­டி­ருக்கக்கூடிய குக்­கிராமம் இது. நில­வளம், நீர்­வளம், விவ­சா­ய­வளம், கால்­நடை வளங்கள், வன­வளம் (காடு) மற்றும் கனி வகை­க­ளின் ­வளம் என இயற்கை வளங்­க­ளினால் நிரம்பியிருந்த இக்­கி­ராம மக்­களின் வழி­பாட்­டிற்­கென விநா­யகர் ஆல­யமும் ஒன்றிருந்­தது. போக்­கு­வ­ரத்து வச­தி­களோ, வியா­பார நிலை­யங்­களோ, சிறப்­பான கல்விக் கூட வச­தி­களோ எது­வுமே இக்­கி­ரா­மத்தில் இருந்­தி­ருக்­க­வில்லை. துவிச்­சக்­க­ர­வண்டி, மாட்­டு­வண்டி என்பன­வற்றின் உத­வி­யுடன் இவர்கள் பய­ணங்­களை மேற்­கொண்­டி­ருந்­தார்கள். அதி­க­மாக நடைப்­ப­யணம் தான். 

புல்­மோட்­டைக்குச் செல்­வ­தற்கு மட்­டுமே ஓர­ளவு பண்­ப­டுத்­தப்­பட்ட பாதையிருந்­தது. கொக்குத்தொடு­வாய்க்குச் செல்­வ­தானால் ஏழு கிலோ­மீற்றர் கால்­ந­டை­யாக மூன்று ஆறு­களைக் கடந்து செல்ல வேண்டும். மாட்டு வண்­டி­யிலும் செல்­லலாம். இப்­பா­தையில் கோட்­டகக்கேணி என்ற இடத்தில் சிறு விநா­யகர் ஆலயம் ஒன்று உண்டு. பய­ணிகள் விநா­யகரை வழி­பட்டு இளைப்­பாறிச் செல்­வ­தற்கு இவ்­வா­லயம் உத­வி­யது. முக்­கி­ய­மாக இது யாழ். முறி­கண்டி பிள்­ளை­யாரைப் போன்று அதி­சக்­தி­ வாய்ந்த பிள்­ளை­யாரே இவ்­வா­ல­யத்­திலும் எழுந்­த­ரு­ளி­யுள்ளார். பய­ணிகள் ஒவ்­வொ­ரு­வரும் கற்­பூரம் ஏற்றி வணங்கிவிட்டே செல்ல வேண்டும். பிள்­ளை­யாரை கவ­னிக்­காது செல்லும் பய­ணி­களின் பயணம் மேலும் தொட­ர­மு­டி­யாத வகையில் பல­த­டை­களைக் கொடுத்­து­வி­டுவார் விநா­யகப் பெருமான். மீண்டும் அவர்கள் திரும்­பி­வந்து பெரு­மானை வணங்கிச் சென்­றால்தான் பய­ணத்தைத் தொட­ரலாம். இது அனு­பவ உண்மை.

கொக்­கிளாய் செல்­வ­தானால் சுமார் 2.5 கிலோ­மீற்றர் சிறு­க­ட­லி­னூ­டாக வள்ளம், கட்­டு­மரம் போன்ற நீர்ப்­போக்­கு­வ­ரத்துச் சாத­னங்­களின் உத­வி­யுடன் செல்­ல­வேண்டும். இவ்­வா­றுதான் இம்­மக்­களின் போக்­கு­வ­ரத்து நடை­முறை இருந்­தது. எல்லாக் குடும்­பங்­க­ளிலும் எருமை, பசு ­போன்ற கால்­ந­டை­களே நிரம்­பவும் உண்டு. ஒவ்­வொரு வீட்­டிலும் சுமார் 30 மாடு­க­ளுக்குக் குறை­யாமல் இருக்கும். பாலும் தயிரும் நெய்யும் இவர்கள் வீட்டில் எப்­பொ­ழுதும் நிரம்பியிருக்கும். கிரா­மத்­துக்கு வரு­ப­வர்­களை உண­வு­கொ­டுத்து ஆத­ரித்து இன்­மு­கத்­துடன் வழி­ய­னுப்­பி­வைக்கும் விருந்­து­ப­சாரப் பண்­பு­டை­ய­வர்கள் இவ்வூர் மக்கள். கொக்­கிளாய், செம்­மலை, கொக்­குத்­தொ­டுவாய், திரியாய், கொட்­டி­யாரம், மூதூர் போன்ற இடங்­களில் இவர்­க­ளுக்குத் திரு­மணத் தொடர்­புகள் உண்டு. 

வர­சித்தி விநா­யகர் ஆலயம் ஒன்று இவ்­வூரின் நடு­விலே விஸ்­தா­ர­மான நிலப்­ப­ரப்­பிலே அமைந்­தி­ருந்­தது. கருணை பொழியும் அருள் விழி­க­ளு­டனும், அழகுத் திரு­மே­னி­யு­டனும் காட்­சி ­தந்து கொண்­டி­ருந்தார் விநா­யகப் பெருமான். ஊர் ­மக்கள் அனை­வரும் தினமும் சென்று வழி­பட்டு மன அமை­தியைப் பெற்­றி­ருந்­தார்கள். இவ்­வா­லய முன்­ற­ிலி­லேயே இக்­கி­ரா­மத்­தி­னு­டைய அனைத்து விட­யங்­களும் அலசி ஆரா­யப்­ப­டு­வது வழக்கம். அனை­வரும் கூடி எடுக்­கப்­படும் முடி­வுகள் விநா­ய­கரின் திரு­வ­ரு­ளுடன் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டன. ஆல­யத்­திலே மார்­கழித் திரு­வா­திரை, சொர்க்­க­வாசல் ஏகா­தசி, தைப்­பொங்கல், மாசி­மகம், சிவ­ராத்­திரி, சித்­திரைப் புது­வ­ருடப் பிறப்பு, ஆவணிச் சதுர்த்தி, கந்­த­சஷ்டி, பிள்­ளையார் கதை என வரு­டந்­தோறும் வரு­கின்ற விஷேட தினங்­களை விர­த­ தி­னங்­க­ளா­கவும், பண்­டிகை தினங்­க­ளா­கவும் நிய­ம­மாக இவ்வூர் மக்கள் அனுஷ்­டிப்­ப­துண்டு. கந்­த­பு­ராணப் படிப்பு ஒவ்­வொரு வரு­டமும் இவ்­வா­ல­யத்­திலே நடை­பெ­று­வ­துண்டு. வள்­ளி­யம்பாள் திரு­மணப் படிப்பு, தெய்­வானை அம்பாள் திரு­மணப் படிப்பு நடை­பெறும் சிறப்­பான தினங்­களில் ஊரே ஒன்று கூடி­நின்று தமது நேர்­மா­னங்­களை நிறை­வேற்றி பொங்கல் பொங்கி படையல் இட்­டு­ தங்கள் வழி­பா­டு­களை மேற்­கொள்­வார்கள். 

முறை­யான கல்வியறிவு வளர்ச்சி குறை­வாக இருந்­தாலும் விவ­சாயத் தொழிலில் இம்­மக்கள் மிகுந்த அனு­பவம் பெற்­றி­ருந்­தார்கள். பறை­யன்­வெளி, கொல்­லை­வெளி, பணிக்­கை­வயல், தில்­லை­ம­டு­வெளி, வாச்­சு­வட்டன் போன்ற இடங்கள் விவ­சாய நிலங்­க­ளா­கவே அமைந்­தி­ருந்­தன. வரு­டத்தில் இரு­போ­கங்­களும் நிறை­வான விளைச்­சலை தந்­து­கொண்­டி­ருந்­தன. அத்­துடன் கச்சான், காய்­கறி மற்றும் தானிய வகைகள் பயி­ரி­டு­வ­தற்கு மணற்­கேணிப் பகு­தியைப் பாவித்­தார்கள்.  

இயற்­கை­யுடன் இணைந்­த­வாழ்வு, சித்­த­வைத்­திய முறை­க­ளோடு இயைந்து பய­ணித்த மக்கள், அவர்­களின் ஆத்­மீ­க­பலம் என்­ப­ன­வெல்லாம் இக்­கி­ரா­மத்­திற்கு வளம் சேர்த்த கார­ணி­க­ளாக அமைந்­தன. இவ்­வ­ள­மான வாழ்வு தொடர்ந்து நீடிக்­க­வில்லை.  

1984 ஆம் ஆண்டு மார்­கழி மாதத்­தி­லி­ருந்து இம்­மக்­களின் சோதனைக் காலம் ஆரம்­ப­மா­னது. காலச்சூழ் நிலையின் தாக்­கத்­தினால் இம்­மக்கள் எல்­லோ­ருமே இவ்­வூ­ரை­விட்டுத் துரத்­தப்­பட்­டார்கள். உடுத்­தி­ருந்த ஆடை­யுடன் பத்து விரல்­களை மட்­டுமே மூல­த­ன­மாகக் கொண்டு ஒவ்­வொ­ரு­வரும் சிதறி ஓடி­னார்கள். கிராமம் முழு­வதும் காடை­யர்­களால் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டது. வளங்கள் அழிக்­கப்­பட்­டன. சொத்­துக்கள் சூறை­யா­டப்­பட்­டன. வர­லாற்று மூலங்­களும் மறைக்­கப்­பட்­டன. இக்­கி­ரா­மத்­துக்கு அருள் கொடுத்து நின்ற சித்­தி­வி­நா­யகப் பெரு­மா­னு­டைய ஆல­யமும் இடித்து அழிக்­கப்­பட்­டது. முல்­லைத்­தீவு, செம்­மலை, கொக்­கிளாய், கொக்­குத்­தொ­டுவாய், தண்­ணீ­ரூற்று போன்ற கிரா­மங்­க­ளுக்கு இம்­மக்கள் அக­தி­க­ளாகச் சென்­றனர். நிர்க்­க­தி­யாக நின்ற இக்­கி­ராம மக்­களை எல்லா கிராம மக்­களும் ஆத­ரித்­தார்கள். உண்­டியும், உறை­யுளும் கொடுத்து அவர்­களை தமது குடும்ப அங்­கத்­த­வர்­க­ளாக நினைத்து அணைத்துக்கொண்­டார்கள். இவ்­வாறு இடம்­பெ­யர்ந்த தென்­ன­ம­ர­வடி மக்­க­ளுக்கு வாழ்­வா­தா­ரங்கள் பல­வற்றைச் செய்­து­கொ­டுத்­தார்கள். இவர்­க­ளுக்­கென முள்­ளி­ய­வ­ளையில் பொன்­னகர் எனும் கிரா­மமும் உரு­வாக்­கப்­பட்­டது. இக்­கி­ரா­மத்­திலே இவர்கள் வீடுகள் அமைத்து குடி­ய­மர்த்­தப்­பட்­டனர். சிலர் வெளி­நா­டு­க­ளுக் குச் சென்­றனர். தொழில்­வாய்ப்­புக்­களும் இவர்­களை நாடி­வந்­தன. மாடு வளர்த்தல், வீடு­கட்­டு­மான வேலைகள், வேளாண்மை செய்தல் போன்ற தொழில் முயற்­சி­களில் இவர்கள் ஈடு ­பட்டு வாழ்க்­கையை மீண்டும் இயல்பு நிலை க்கு கொண்டு வந்­தார்கள். 

தற்­பொ­ழுது இக்­கி­ரா­மத்தில் மக்கள் மீளக்­ கு­டி­ய­மர்­வ­தற்கு இறை­யருள் கிட்­டியுள்ளது. 3 தசாப்­­தங்­க­ளுக்கு மேலாக இம்­மண்ணை விட்டு இடம்­பெ­யர்ந்து, மீண்டும் இந்­நி­லத்­திலே வந்து கால்­ப­தித்து தமது வாழ்க்­கையை மீள் உரு­வாக்­கு­வ­தற்கு முனைந்­தி­ருக்கும் இம்­மக்­க­ளுக்கு அரு­ளாசி வழங்கிக் காத்­த­ருள, விநா­யகப் பெருமான் தனது திருப்பாதங்களை இவ்வூரிலே மீளவும் பதித்திருக்கின்றார். அத் துடன் வெளிநாட்டிற்கு இடம்பெயர்ந்து சென்ற இவ்வூர் மக்களின் உதவியுடனும், இலங்கை யிலேயே வெவ்வேறு கிராமங்களில் வசிக் கும் இவ்வூரைச் சேர்ந்த மக்களின் உறவினர் களின் அனுசரணையுடனும், சித்திவிநாயகப் பெருமானுக்கு புதிதாக ஆலயம் அமைக்கப் பட்டிருக்கின்றது. ஆகம முறைக்கேற்ப கட்டு மானப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு எதிர் வரும் 28.08.2019 அன்று இவ்வாலயத்திலே கும்பாபிஷேகப் பெருவிழா நடைபெறுவதற்கு இறையருளும் கிடைத்திருக்கின்றது. இக்கும் பாபிஷேகப் பெருவிழாவிலே அடியார்கள் அனைவரும் வந்து கலந்துகொண்டு விநாயகப் பெருமானுடைய திருவருளைப் பெற்று உய்யும் வண்ணம் ஆலய அறங்காவலர்கள் வேண்டுகின்றார்கள்.

 

மண்ணுலகத்தினில் பிறவி மாசற

எண்ணிய பொருளெலாம் எளிதில் முற்றுற

கண்ணுதல் உடையதோர் களிற்றுமாமுக

பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவாம்

 

 

-திருமதி ஹேமா சண்முகசர்மா