You are here : Kovils

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




கிருஷ்ண ஜெயந்­தி­விழாவில் ஸ்ரீஸ்ரீ ராதா­கி­ருஷ்ண ஆல­யத்தில் பக்­தர்களுக்கு குழந்­தைக்­கி­ருஷ்­ணாவை தொட்­டிலில் இட்டு ஆட்டும் வாய்ப்பு !

2019-08-19



கொழும்பு , கொட்­டாஞ்­சேனை ஸ்ரீஸ்ரீ ராதா­கி­ருஷ்ண ஆல­யத்தில்  எதிர்வரும் 24ஆம் திகதி கொண்­டா­டப்­படும் ஸ்ரீகி­ருஷ்ண ஜன்­மாஸ்­டமி விழாவில் ஓர் சிறப்பு அம்­ச­மாக குழந்­தைக்­கி­ருஷ்­ணாவை பக்­தர்கள் தொட்­டிலில் இட்டு ஆட்டும் வாய்ப்பு கிட்­ட­வி­ருக்­கி­றது.  

'பரித்­ரா­ணாய சாதூனாம் வினா­ஸாய ச்சா துஸ்க்­ருதாம் 
 தர்­ம­சம்ஸ்த பணர்த்­த­யா­ஸம்­ப­வாமி யுகே யுகே"

இவை  பக­வத்­கீ­தையில் பகவான் கிருஷ்­ணாவால் போதிக்­கப்­பட்ட வரிகள். அதா­வது ‘எப்­பொ­ழுது எங்கு தர்மம் தலை­சாய்ந்து அதர்மம் தலை­யோங்­கு­கி­றதோ அப்­பொ­ழுது அங்கு அதர்­மத்தை அழித்து தர்­மத்தை நிலை­நாட்ட நான் யுகந்­தோரும் அவ­த­ரிக்­கின்றேன்’ என்­ப­தாகும்.
அதன்­படி  தர்மம் தலை­சாய்ந்து அதர்மம் தலை­யோங்­கி­யி­ருந்த ஒரு காலப்­ப­கு­தியில் அதா­வது சுமார் 5200 ஆண்­டு­க­ளுக்கு முன்னர் மது­ராவில் பகவான் கிருஷ்ணா அவ­த­ரித்தார். கீதையில் கூறி­யுள்­ள­ப­டியே அதர்­மத்தை அழித்து தர்­மத்தை நிலை­நாட்­டினார்.

அதர்­மத்தை அழித்து தர்­மத்தை நிலை­நாட்ட  பகவான் கிருஷ்ணா தோன்­றிய அஷ்­டமி திதி இவ்­வ­ருடம் எதிர்­வரும் 24ஆம் திகதி சனிக்­கி­ழ­மை­யாகும்.  
     


இத­னை­யொட்டி அன்­றைய தினம் கொட்­டாஞ்­சேனை ஸ்ரீஸ்ரீ ராதா­கி­ருஷ்ண ஆல­யத்தில் அதி­காலை முதல்  நள்­ளி­ரவு வரை விஷேட அபி­ஷேக ஆரா­த­னைகள் இடம்­பெறும். பக்­தர்கள் பசித்­தி­ருந்து விழித்­தி­ருந்து பிரார்த்­த­னை­களில் ஈடு­ப­டுவர்.

அதி­காலை 5.30க்கு மங்­கள ஆராத்­தி­யுடன் ஆரம்­ப­மாகும் விழாவில் துளசி ஆராத்தி, தர்­சன ஆராத்­தியும் குரு பூஜையும், வலம்­பு­ரிச்­சங்­கினால் பாலா­பி­ஷே­கமும் தொடர்ந்து குழந்­தை­கி­ருஷ்­ணாவை தொட்­டி­லி­லிட்டு ஆட்­டுதல், நண்­பகல் ராஜ­போக ஆராத்தி, மாலை சந்­தியா ஆராத்தி, கிருஷ்­ணா­வ­தா­ரம் ­பற்­றிய சிறப்­புரை, நள்­ளி­ரவு 12.00 மணிக்கு பகவான் கிருஷ்­ண­ருக்கு மகா அபி­ஷே­கமும் ஆரா­த­னை­களும் இடம்­பெற்று பக்­தர்­க­ளுக்கு பிர­சாதம் வழங்­கப்­படும்.

ஸ்ரீகி­ருஷ்ணர் அவ­த­ரித்த தினத்தை ஒவ்­வொரு ஆண்டும் பக்­தர்கள் கிருஷ்ண ஜெயந்­தி­யாக கொண்­டா­டு­கிறோம். ஆவணி மாதம் தேய்­பிறை அஷ்­ட­மி­யன்று, ரோகிணி நட்­சத்­தி­ரத்தில் நள்­ளி­ரவு நேரத்தில் சிறைக்குள் வசு­தேவர் தேவகி தம்­ப­தி­ய­ருக்கு எட்­டா­வது மக­னாகக் கிருஷ்ணன் அவ­த­ரித்தார். கம்சன் தன் குழந்­தையை வதம் செய்­து­வி­டு­வானோ என்ற பயத்தில் கொட்டும் மழையில் பச்­சிளம் பால­கனை கோகு­லத்தில் பல­ராமர் யசோதை தம்­ப­தி­ய­ரிடம் ஒப்­ப­டைக்­கிறார் வசு­தேவர். மூன்று வயது வரை கோகு­லத்­திலும், ஆறு வயது வரை பிருந்­தா­வ­னத்­திலும், ஏழு வயதில் கோபியர் கூட்­டத்­திலும், எட்­டி­லி­ருந்து பத்து வயது வரை மது­ரா­விலும் கிருஷ்­ணனின் இளம் பிராயம் கழிந்­தது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது .. 

பக்­தர்கள் அபி­ஷே­கத்­திற்­குத்­தே­வை­யான பால், இளநீர், பழம், மலர்கள் என்­ப­ன­வற்­றையும் இரவு அன்­ன­தா­னத்­திற்­குத் ­தே­வை­யான பொருட்­க­ளையும் கொண்­டு­வந்து கொடுக்­கலாம்.
அடுத்த நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை நண்­பகல் 12.00 மணிக்கு சர்வதேச கிருஷ்ண பக்திக்கழக ஸ்தாபகரும் ஆன்மிகக் குருவுமான அருட்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவின் வியாசபூஜை நடைபெறும். இம் முறை விழாவில் ஓர் சிறப்பு அம்சமாக குழந்தைக்கிருஷ்ணாவை பக்தர்கள் தொட்டிலில் இட்டு ஆட்டும் வாய்ப்பு கிட்டியுள்ளது. 


  -கிருஷ்ணப்பிரியன்