You are here : Kovils

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




பெரியகல்லாறு மடத்தடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வரு­டாந்த விநா­யகர் சதுர்த்தி அலங்­காரத் திரு­விழா !

2019-08-15


மட்­டு­வா­வியை பின்­புற எல்­லை­யாகக் கொண்டு கல்­முனை மட்­டக்­க­ளப்பு பிர­தான வீதியின் அருகே பெரி­ய­கல்­லாற்றின் எழில்­மிகு இயற்கைச் சூழலில் மிகவும் அடக்­க­மாக அமை­யப்­பெற்­ற­துதான் மடத்­தடி சித்­தி­வி­நா­யகர் ஆலயம்.


இவ்­வா­ல­யத்­திற்கு மடத்­தடி என்ற இடப்­பெ­ய­ரையும் இணைத்துக் கொண்­ட­தற்கு வர­லாற்று ரீதி­யான காரணம் உண்டு. கதிர்­கா­மத்­திற்கு பாத­யாத்­தி­ரை­யாகச் செல்­வோ­ருக்கு கடந்த 95 வரு­டங்­க­ளுக்கு முன்னர் வைத்­தி­லிங்கம் ஆண்டி என்ற தனி­நபர் வச­திகள் செய்து கொடுத்­தி­ருந்தார். அதனால் வெளி இடங்­களில் இருந்து கதிர்­காமம் பாத­யாத்­தி­யை­யாகச் செல்வோர் தங்கும் இடங்­களில் ஒரு முக்­கிய இட­மாக இதை கருதி இங்கு தங்கிச் செல்­வது வழக்கம். 
அதனால் ஆலயம் அமைந்­துள்ள பகுதி மடத்­தடி என்ற பெயர் கொள்­ள­லா­யிற்று.


இங்கு ஆரம்­பத்தில் யாத்­தி­ரி­கர்­க­ளுக்­காக பிள்­ளையார் படம் ஒன்றே வழி­பாட்­டிற்­காக வைக்­கப்­பட்­டி­ருந்­தது. பின்னர் ஒரு சிறு ஆலயம் வைத்­தி­ய­லிங்கம் ஆண்­டியால் அமைக்­கப்­பட்டு, வழி­பா­டுகள் தொடர்ந்­தன. அவரின் பரம்­ப­ரையில் வந்த ஆண்­களே இவ்­வா­ல­யத்தின் அர்ச்­ச­க­ராக கரு­ம­மாற்றும் மரபு நீண்­ட­கா­ல­மாகப் பின்­பற்­றப்­பட்டு வந்­தது.


குறு­கிய காலத்தில் மண்­ட­பத்­துடன் கூடிய மூல­ஸ­தானம் கொண்ட், வீதி­யோர பிள்­ளை­யாரும் வீற்­றி­ருக்க கூடிய வித­மாக, ஆலயம் அமைக்­கப்­பட்டு, குருக்கள் நிய­மிக்­கப்­பட்டு ஆல­யத்தின் நித்­திய பூசைகள் அனைத்தும் வேளை தவ­றாது சிறப்­பாக நடை­பெற்று வரு­கின்­றது. அவ்­வாறே விசேட கால பூஜை­களும் விர­தங்­களும் ஆல­யத்தில் இடம்­பெற்றெ வரு­கின்­றது.


ஆலய வளா­கத்தில் வம்மி, வேம்பு, வில்வம், அரசு, நாவல் மற்றும் விருட்­சங்கள் ஆல­யத்தின் பசு­மைக்குப் பங்­க­ளிப்புச் செய்­கின்­றன. ஆலய வளா­கத்துள் அமைந்­துள்ள வயற்­கா­ணியும் ஆல­யத்தின் அழ­கிற்கு மெரு­கூட்­டு­கின்­றது.


சிறிய அடக்­க­மான ஆல­ய­மாக இருந்­த­போதும் கூட அதி­லி­ருந்து அருள்­பா­லிக்கும் மடத்­தடி பிள்­ளை­யாரின் சக்தி பக்­தர்­களை வெகு­வாகக் கவர்ந்து வரு­கின்­றது. அவர்­களின் வேண்­டு­தல்கள் கைகூ­டு­வ­தாக அவர்கள் தெரி­விக்­கின்­றனர். இதனால் ஆல­யத்­திற்கு தாமாக முன்­வந்து பக்­தர்கள் பாரிய பங்­க­ளிப்­புக்­களைச் செய்­கின்­றனர்.            இவ்­வா­ல­யத்தில் வரு­டாந்த விநாகர் சதுர்த்தி அலங்­கார திரு­விழா எதிர்­வரும்  24ஆம் திகதி சனிக்­கி­ழமை தொடக்கம் அடுத்­த­மாதம் 3ஆம்­தி­கதி வரை 11 நாட்கள் நடை­பெறும்.


பால,பக்தி,தருண,உச்­சிட்ட, வீர, விஜய. சக்தி, சித்தி,சங்­க­ட­கர, சதுர்த்தி, பெயரில் முறையே திரு­வி­ழாக்கள் 10நாட்­களும் நடை­பெறும். 11ஆம்நாள் (03.09) சனிக்­கி­ழ­மை­யன்று தீர்த்­தோற்­சவம், திரு­வூஞ்சல் நடை­பெற்று இரவு பூங்­கா­வன தெப்பத் திரு­வி­ழாவும் இடம்­பெறும்.; மறுநாள் வைரவ பூசை­யுடன் நிகழ்வுகள் நிறைவு பெறும்.
உற்சவகால குருமார்களாக காரைதீவு சிவன் ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ சிதம்பர சாந்தரூபன் குருக்களும். ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ பி.சுசேந்திரன் குருக்களும் கிரியைகளை மெற்கொள்வர்.          
– பெரி­ய­கல்­லாறு நிருபர்