You are here : Kovils

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவத்துடன் பிதிர்கடன் செலுத்தும் சடங்கு

2019-07-31


மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்  இன்று புதன்கிழமை  (31-07-2019) பகல் 12 மணிக்கு சிறப்புடன் நடைபெற்றது.

இன்றைய தினம் பிதிர்கடன் செலுத்துவதற்கு சிறப்பு மிக்க தினம் என்பதால் அடியார்கள் தீர்த்தம் ஆடுவதற்கு முன்பாக குளக்கரையில்  சிவாச்சாரியார்களின் உதவியுடன் மூதாதையர்களுக்கு  தர்ப்பணம் வழங்கி பிதிர் கடன் கழித்தும் தான தருமங்கள் செய்தும் அவர்களின் ஆசியை பெற்றுகொண்டனர்.  

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்ட இத் தீர்த்தோற்சவத்தில், ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ ஆதிசவுந்தரராஜ குருக்கள் தலைமையில்  கிரியைகள் நடைபெற்று தீர்த்தோற்சவம்  சிறப்புடன் நடைபெற்றது.


(வவுணதீவு நிருபர் சதீஸ் )