You are here : Kovils

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




இரணைமடு கனகாம்பிகை அம்பாள் பெருங்கோவில் மகோற்சவம் ஆரம்பம்.

2019-04-11


வரலாற்று சிறப்புமிக்க கிளிநொச்சி இரணைமடு திருவருள்மிகு கனகாம்பிகை அம்பாள் பெருங்கோவில் மகோற்சவம் நேற்றைய தினம்  (10:04:2019)  கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. 


கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடு தடாகத்தின் அருகே கோவில் கொண்டு எழுந்தருளி இருக்கின்ற திருவருள்மிகு கனகாம்பிகை அம்பாள்  ஆலய உற்சவமானது 11 நாட்கள் பெருவிழாவாக நடைபெறுகின்றது. 


விழாவின் முக்கிய நிகழ்வான  தேரோட்ட நிகழ்வு ஒன்பதாம் நாளாகிய 18:4:2019 (வியாழக்கிழமை)விமர்சையாக நடைபெறவுள்ளது. இதன் போது 3 சித்திரத் தேர் பவனிவர உள்ளமை குறிப்பிடத்தக்கது.


19:04:2019 அன்று இரண்டு தடாகத்தில் தீர்த்த உற்சவம் நடைபெற்று, அன்று மாலை இரணைமடு தீர்த்தத் தடாகத்தில் இருந்து கும்ப தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு இடம்பெறும். அத்துடன் பாரம்பரிய நிகழ்வான பொங்கல் நிகழ்வு அன்று இரவு இடம்பெறும்.
மகோற்சவ காலங்களில் அடியவர்கள் கோவில் வந்து செல்வதற்காக கிளிநொச்சி நகரில் இருந்து,இலங்கை போக்குவரத்து சபையினரால் பயண ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது.