You are here : Arts

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




14 ஆண்டுகளின் பின்பு கிழக்­குப்­ பல்­க­லைக்­க­ழ­கத்தில் உலக நாடக தின விழா!

2019-04-23


உலக நாடகதினம் உலகலாவிய ரீதியில் மார்ச்  மாதம் 27 ஆம் திகதி கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி14 வரு­டங்­களின் பின் கிழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்தின்  நுண்­க­லைத்­துறைத் தலைவர்  சு. சந்­தி­ர­கு­மாரின் முழு முயற்­சியால் இவ்வருடம் உலக நாடக விழா வெகுசிறப் பாக நடைப்பெற்றள்ளது. 

கிழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் நுண்­க­லைத்­து­றையின் ஏற்­பாட்டில்  உலக நாடக தினத்­தன்று 

நுண்­க­லைத்­து­றையின் பண்­பாட்டு இசை­ய­ணியின் அதி­திகள் வர­வேற்­புடன் ஆரம்பமான இவ்விழாவினை  நுண்­க­லைத்­துறைத் தலைவர் சு.சந்­தி­ர­குமார் அவர்­களின் தலை­மைதாங்கியிருந்தார்.   இவ்­வி­ழாவின் ஆரம்ப வைப­வத்தில் பிர­தம அதி­தி­யாக பிரதி துணை­வேந்தர் வைத்­திய கலா­நிதி கே.ஈ.கரு­ணா­கரன்,  சிறப்பு அதி­தி­க­ளாக திரு­கோ­ண­மலை வளாகத் தலைவர் பேரா­சி­ரியர் வி.கன­க­சிங்கம்,  கலை கலா­சார பீடத்தின் பீடா­தி­பதி மு.ரவி,  விஞ்­ஞான பீட பீடா­தி­பதி பி.பிர­தீபன்,  கிழக்குப் பல்­க­லைக்­க­ழகப் பதி­வாளர் அ.பகீ­ரதன்,  கௌரவ அதி­தி­க­ளாக பேரவை உறுப்­பினர் பேரா­சி­ரியர் சி.மௌன­குரு,  கலை கலா­சார பீடத்தின் பிரதிப் பதி­வாளர் ஜனாபா மு.ச.ஐ.மும்தாஜ் சமீம்,  மட்­டக்­க­ளப்பு மாவட்ட கலா­சார இணைப்­பாளர் த.மலர்ச்­செல்வன், புவி­யி­யற்­துறைத் தலைவர் ஆர்.கிரு­ப­ராஜா ஆகியோர் பங்­கு­பற்றிச் சிறப்­பித்­தார்கள். 

விழாவின் மாலை அமர்வில் வேளையில்  நுண்­க­லைத்­துறை சிரேஷ்ட விரி­வு­ரை­யா­ளர்­க­ளான கு.ரவிச்­சந்­திரன், து.கௌரீஸ்­வரன் ஆகியோரின் நெறிப்­ப­டுத்­தலில் சிறுவர் நாட­கங்கள் மூன்று ஆற்­றுகை செய்­யப்­பட்­டி­ருந்­தன. இந்­நா­ட­கங்­களில் நுண்­க­லைத்­துறை மாண­வர்கள் அனை­வரும் பங்­கு­பற்­றி­யி­ருந்­தனர்.

இந்த வகையில் கு.ரவிச்­சந்­திரன் அவர்கள், க.தில­க­நா­தனால் எழு­தப்­பட்ட 'பெரியோர் சொற்­கேட்போம்' இ.கம­ல­நா­தனால் எழு­தப்­பட்ட 'பூனை வைத்தியர்' எனும் இரண்டு சிறுவர் நாடகங்களையும் து.கௌரீஸ் வரன் அவர்கள் 'கூழ் குடித்த குரங்குகள்' எனும் சிறுவர் நாடகத்தையும் எழுதி நெறிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.