You are here : Arts

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS
நூல் விமர்சனம் - சாகித்­திய ரத்னா விருது பெற்ற “வந்­தனா”

2019-04-08


இலங்கை முற்­போக்கு கலை இலக்­கிய மன்றம்  2019 மார்ச்சில் வெளி­யிட்­டி­ருக்கும் நூல் இது. இலக்­கியச் செயற்­பா­டு­க­ளுக்­காக படைப்­பாக்கப் பணி­க­ளுக்­காக, சமூக அக்­க­றை­யு­ட­னான இலக்­கிய அர்ப்­ப­ணிப்­பு­க­ளுக்­காக இலங்கை அரசு வழங்கும் அதி உயர் இலக்­கிய விரு­தான 'சாகித்­திய ரத்னா' விருது 2017ஆம் ஆண்டு நீர்வை பொன்­னையன் அவர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது.


இந்த “வந்­தனா” என்னும் சிறு­கதை நூல் நீர்­வையின் 11 ஆவது சிறு­கதைத் தொகுதி. 1961 இல் வெளி­வந்த இவ­ரு­டைய ‘மேடும் பள்­ளமும்’ எனும் முதல் தொகுதி இலங்­கையில் மக்கள் பிர­சு­ரா­ல­யத்­தி­னரால் வெளி­யி­டப்­பட்­டது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. அதே கால­கட்­டத்தில் வெளி­வந்த டொமினிக் ஜீவாவின் ‘தண்­ணீரும் கண்­ணீரும்’ (1960) செ.கணே­ச­லிங்­கனின் 3 தொகு­திகள் போன்­ற­வைகள் தமிழ் நாட்­டி­லி­ருந்து வெளி­வந்­த­வை­களே.


இலங்கை கம்­யூனிஸ்ட் கட்­சியின் பிர­சு­ரா­ல­ய­மான மக்கள் பிர­சு­ரா­லயம் வெளி­யிட்ட முதல் தமிழ் நூலும் இதுவே. அந்த வகை­யிலும் நீர்­வைக்கு ஒரு வர­லாற்று முத்­திரை உண்டு.


‘நீர்வை பொன்­னை­யனின் இந்தக் கன்னி நூலை எமது முதல் தமிழ் வெளி­யீ­டாகக் கொண்டு வரு­வதில் நாம் பெரு­மைப்­ப­டு­கின்றோம்.’ தென்­னிந்­தி­யா­வி­லி­ருந்து வரும் புத்­த­கக்­கு­வி­யல்கள் இலங்­கையின் தமிழ் வாச­கர்­களை திருப்­திப்­ப­டுத்­து­மென்று இதுவரையில் ஒரு பொது­வான அபிப்­பி­ராயம் நிலவி வந்­தது. இது ஒரு தவ­றான அபிப்­பி­ராயம்.  
பிரிட்டிஷ் ஏகா­தி­பத்­தி­யத்தின் உடும்புப் பிடியில் இரு நாடு­களும் சிக்கித் தவித்­துக்­கொண்­டி­ருந்த காலத்தில் இவ்­வி­த­மான எண்ணம் தவ­றா­ன­தாகப் பட­வில்லை. ஆனால், சுதந்­தி­ரத்­திற்குப் பின் பூகோள, அர­சியல் கலா­சார முறை­களில் மாறு­பட்­ட­தாக இருப்­பதால் தேசிய அடிப்­ப­டையில் ஈழத்து எழுத்து தமது கலா­சார, இலக்­கிய தேசிய சம்­பத்­துக்­களை வெளிக்­கொ­ணர வேண்­டு­மென்­பது ஒரு கட்­டாய நிய­தி­யாகி விட்­டது.


ஈழத்து எழுத்­தா­ளர்கள் தென்­னிந்­திய எழுத்­தா­ளர்­க­ளுக்குக் குறைந்­த­வர்கள் அல்ல என்­ப­தற்கு நீர்வை பொன்­னை­யனின் இந்தக் கதைத் தொகுதி ஒரு நல்ல எடுத்­துக்­காட்டு என்று தனது பதிப்­பாளர் உரையில் கூறிச்­சென்­றி­ருக்­கிறார் மக்கள் பிர­சு­ரா­லய அதிபர் எச்.ஜி.எஸ்.ரத்ன வீர (மேடும் பள்­ளமும்– பதிப்­புரை 1961).


4 சிறு­க­தை­களைக் கொண்ட தொகுதி வந்­தனா. இந்தப் பதி­னான்கு கதை­க­ளுமே ஏறத்­தாழ 100 பக்­கங்­க­ளுக்குள் அடக்­கப்­பட்­டுள்­ளன என்னும்போது ஒவ்­வொரு கதையும் ஏழு பக்­கங்­க­ளுக்கு மேல் போக­வில்லை என்­றா­கி­றது. இதை நூலா­சி­ரி­யரும் தனது முன்­னு­ரையின் கவ­னத்­துக்­குள்­ளாக்­கு­கின்றார். ‘வந்­தனா சிறு­கதைத் தொகு­தி­யி­லுள்ள அநே­க­மா­னவை குறு­கி­ய­வை­யா­கவே அமைந்­துள்­ளன’ என்று  இந்த நூலுக்­கான நீர்­வையின் முன்­னுரை வித்­தி­யா­ச­மா­னது.
‘அர­சியல் களத்­தி­லி­ருந்து இலக்­கியக் களத்­துக்கு வந்­தவன் நான். 1947 இல் என் அர­சியல் பயணம் ஆரம்­ப­மா­னது. 1957 இல் எனது இலக்­கியப் பயணம் ஆரம்­ப­மா­கி­யது. 1957 இலி­ருந்து 2019 ஆம் ஆண்டு வரை 122 சிறு­க­தை­களை மாத்­தி­ரமே என்னால் எழுத முடிந்­தி­ருக்­கி­றது. ‘மேடும் பள்­ளமும்’ சிறு­கதைத் தொகு­தி­யி­லி­ருந்து வந்­தனா தொகு­தி­வரை பதி­னொரு சிறு­கதைத் தொகு­தி­களை என்னால் கொண்­டு­வர முடிந்­துள்­ளது.


எனது சிறு­கதைத் தொகுதி ஒன்­றுக்குத் தானும் அரச சாகித்­திய மண்­டல விருது கிடைக்­க­வில்லை. காரணம் அர­சியல். ஆனால், 2017 ஆம் ஆண்டில் அரச சாஹித்ய ரத்னா விருது கிடைத்­தது. எனது கதைகள் விவ­சா­யிகள் தொழி­லாளர்: உழைக்கும் பரந்து பட்ட வெகு­ஜ­னங்கள் ஆகி­யோ­ரது இன்ப துன்­பங்­களைத் தாங்கி வெளி வரு­கின்­றன. முத­லா­ளித்­து­வத்தின் ஈவி­ரக்­க­மற்ற சுரண்­டலை அம்­ப­லப்­ப­டுத்தி அதற்­கெ­தி­ராகப் போராடும் உந்து சக்­தி­யாக எனது படைப்­பு­களைப் புனை­கின்றேன்.


எனது இலக்­கியச் செல்­நெ­றிக்கு கட்­சியின் ஆசி­யையும் அங்­கீ­கா­ரத்­தையும் வேண்டி நின்றேன். அது எனக்கு கிடைத்­தது.  எனது முத­லா­வது சிறு­கதைத் தொகு­தியை கட்­சியின் துணை அமைப்­பான மக்கள் பிர­சு­ரா­லயம் வெளி­யிட்­டுள்­ளது. இதைத் தொடர்ந்து நான் இலக்­கி­யத்­த­ளத்தில் பய­ணித்­துக்­கொண்­டி­ருக்­கின்றேன். நான் ஒரு கம்­யூனிஸ்ட். ஆனால் நான் அறு­ப­து­களின் பிற்­ப­கு­தியிலிருந்து கம்­யூனிஸ்ட் கட்­சியின் உறுப்­பினர் இல்லை. கம்­யூனிஸ்ட் கட்சி நோய்­வாய்ப்­பட்­டுள்­ளது…. 


‘வந்­தனா’ தொகுதி முன்­னு­ரையில் நீர்­வையின் சில வரிகள் இவை. சிறு­கதை வடிவை  மாத்­தி­ரமே தனது பிர­தான இலக்­கியத் தள­மாகக் கொண்டு எழுதி வரு­பவர் நீர்வை பொன்­னையன். 50களில் மேற்­ப­டிப்­பிற்­காக கல்­கத்தா சென்று அங்­குள்ள பல்­கலைக்கழ­கத்தில் பயின்று பட்­ட­தா­ரி­யா­னவர். கல்வி கற்கும் காலத்­தி­லேயே மாணவர் சங்­கத்­தி­னூ­டாக அடக்கு முறைக்கும் அநீ­திக்கும் எதி­ரான போராட்­டங்கள் நடத்­தி­யவர்.


இந்தத் தொகு­தியின் ‘வந்­தனா’ கதையும் (பக் 24) ‘சாயல்’ கதையும் (பக் –63) இந்த கல்­லூரிக் காலத்­தையும் மாணவர் போராட்­டங்­க­ளையும் மைய­மாகக்கொண்ட கதை­களே. ‘இந்தப் படைப்­புகள் இரண்­டு­டனும் நான் நேர­டி­யாகத் தொடர்­பு­பட்­டி­ருக்­கின்றேன். 
1951 இல் நடை­பெற்ற சம்­ப­வங்கள் இவை’ என்றும் முன்­னு­ரையில் பதி­கின்றார் நீர்வை அவர்கள். தகவல் தவ­று­களும் அச்சுப்பிழைகளும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டியவைகள். உதாரணத்துக்கு இரண்டு மாத்திரமே.


பக்கம் –110 நீர்வையின் நூல்கள். உதயம் –1978 என்பது தகவல் தவறு. 1970 என்றிருக்க வேண்டும். உதயம் தொகுதிக்கான சாஹித்ய மண்டல விருது தமிழ்ப்பகுதித் தலைவர்களால் தடுக்கப்பட்டதும் அப்போதுதான். இதே பட்டியலில் ஏனைய நூல்கள் 2 முற்போக்கு இலக்கிய முன்னோடிகள் என்பது. ஏராளமான எழுத்துப் பிழைகள். வரவேற்புக்குகந்த நூல்.

கிடைக்குமிடம்  - பூபாலசிங்கம் புத்தகசாலை.

விலை 275/=.

நன்றி வீரகேசரி