You are here :

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS
"எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துச் சொல்லும் வகையில் இலக்­கி­யங்கள் படைக்­கப்­பட வேண்டும்'

January 12, 2016
ஒரு சமூ­கத்தின் இருப்பை அடுத்துவரும் சந்­த­தி­யின­ருக்கு  எடுத்துச் சொல்லும் வகையில் இலக்­கி­யங்கள் படைக்­கப்­பட வேண்டும்
என்கிறார் எழுத்­தாளர் கலா­பூ­ஷணம் யோகா யோகேந்­திரன்.-

அம்­பாறை மாவட்ட பெண் எழுத்­தா­ளர்­களில் ஒரு­வ­ரான திருக்­கோவில் பிர­தே­சத்தில் பிர­தே­சத்­திற்கும் பெண்கள் சமூ­கத்­திற்கும் பெருமை சேர்த்து வரும் திருக்­கோவில் யோகா யோகேந்­திரன் சிறந்த சிறு­கதை எழுத்­தா­ள­ராக தன்னை இலக்­கிய உலகில் அடை­யா­ளப்­ப­டுத்திக் கொண்டு நாவல், கவிதை, சிறுவர் இலக்­கி­யங்கள் என தனது எழுத்துப் பய­ணத்தை அமை­தி­யாக   தொடர்ந்து எழுதிக் கொண்டு வரு­கின்றார்.

இவர்  சிறு வய­தி­லி­ருந்து சிறு­சிறு ஆக்­கங்­களை எழுதி தேசிய நாளி­தழ்­களின் மூலம் இலக்­கி­யத்­து­றைக்கு பிர­வே­சித்­துள்­ள­துடன் ஊட­கங்கள் ஊடாக இவரின் எழுத்­துக்­க­ளுக்கு ஒரு அங்­கீகாரம் கிடைத்­­துள்­ளது.

இவரின் சிறு­க­தை­க­ளுக்கு பிர­தேச, மாவட்ட, மாகாண, தேசிய மற்றும் சர்­வ­தேச ரீதியில்  விரு­து­களும்,பரி­சில்­களும் கிடைக்­கப்­பெற்­றுள்­ளன.

அந்­த ­வ­கையில் இவ­ருக்கு சர்­வ­தேச பெண்கள் அமைப்­பினால் “சிறந்த பெண் எழுத்­தாளர் விருது, திருக்­கோவில் உத­ய­சூ­ரியன் விளை­யாட்டு கழ­கத்­தினால் “அரி­ய­நா­யகம் விருது” கிழக்கு மாகா­ண­ச­பையால் 'முத­ல­மைச்சர் விருது'  'கலா­பூ­ஷண விருது' போன்­றன கிடைக்­கப்­பெற்­றுள்­ள­துடன் இவர் அண்­மையில் வெளி­யிட்­டி­ருந்த “மீண்டும் ஒரு காதல்­கதை” எனும் நாவலுக்கு கடந்த மாதம் கிழக்கு மாகா­ண­ச­பை­யினால் சிறந்த நாவ­லுக்­கான பரிசும் கிடைக்­கப்­பெற்றிருந்தமைக் குறிப்­பி­டத்­தக்­கது. 

இவ்­வாறு இலக்­கியத் துறையில் பல சவால்­க­ளுக்கு மத்­தியில் தமிழின் இருப்­புக்காக பணி­யாற்­றி­வரும் திருக்­கோவில் திரு­மதி யோகா யோகேந்­திரனை  வீர­கே­சரி சங்­கமம் பத்­தி­ரி­கைக்கு நேர்­காண்ட போது அவர் எம்­முடன் பகிர்ந்து கொண்ட விடயங்கள் வாசகர்களுக்காக...

கேள்வி : இலக்­கி­ய­த்­து­றைக்குள் நீங்கள் எவ்வாறு ஈர்க்கப்பட்டீர்கள் என்று கூற முடியுமா? 
நான் வர­லாற்று பெருமை கொண்ட திருக்­கோவில் கிரா­மத்தைப் பிறப்­பி­ட­மா­கவும், வாழ்­வி­ட­மா­கவும் கொண்­டி­ருப்­ப­துடன் நான் ஓய்­வு­பெற்ற ஆசி­ரியை.

என் கண­வரும் ஓய்­வு­பெற்ற ஆசி­ரி­ய­ராக இருப்­ப­துடன் எனது மகள் யாழ்.நுண்­கலைப் பீட இறு­தி­யாண்டு மாண­வி­யாக இருக்­கின்றார்.

எனது கண­வரும், மகளும் மற்றும் சகோ­த­ரி­களும் எனது எழுத்­து­த்து­றைக்கு கூடிய ஒத்­தா­சையும், உற்­சா­கமும் கொடுத்து வரு­கின்­றனர்.

இதனால் என்னால் தொடர்ந்து எழுதக் கூடி­ய­தாக இருக்­கின்­றது. 

எனக்கு சிறு­ வ­யது முதல் வாசிப்பு பழக்கம் அதி­க­மாக இருந்­தது. இதனால் நான் அக்­கா­லங்­களில் வெளி­வந்த தின­கரன், வீர­கே­சரி, சிந்­தா­மணி போன்ற பத்­தி­ரி­கை­க­ளுடன் சுக­வாழ்வு, செங்­கதிர் ஆகிய சஞ்­சி­கைகள், சிறு­கதை மற்றும் நாவல் போன்ற இலக்­கிய நூல்­க­ளையும் வாசித்து வரும் நிலையில் அதன்பால் ஈர்க்­கப்­பட்டு நாளும் எழு­து­வ­தற்கு ஆரம்­பித்தேன்.

இதன்­போது எனக்கு கிடைத்த உற்­சா­கமும், பாராட்­டுக்­களும் இன்று என்­னையும் ஒரு சாதா­ரண சிறு­கதை எழுத்­தா­ள­ராக உயர்த்­தி­யுள்­ளமை கட­வுளின் கருணை. .

கேள்வி: நீங்கள் மூத்த சிறு­கதை எழுத் தா­ள­ராக இருப்­ப­துடன்,மர­புக்­க­விதையை விட புதுக்­க­வி­தை­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கொடுத்தி­ருப்­பதை தங்­களின் கவிதை நூல் மூலம் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கின்றது. என்ன காரணம்?

நான் கவி­ஞ­ரல்ல. இலக்­கி­யத்­து­றையில் நான் ஒரு சாதா­ரண சிறு­கதைப் படைப்­பா­ளியே தவிர நான் கவி­தைத்­து­றையில் அதி­க­மாக ஈடு­­ப­ட­வில்லை.

நான் அண்­மையில் நாவல், சிறு­கதை, கவிதை எனும் மூன்று இலக்­கிய நூல்­களை ஒரே தட­வையில் வெளி­யிட்டிருந்தேன். 

அந்த சந்­தர்ப்­பங்­களில் என்­னிடம் இருந்த சில கவி­தைகளைத் தொகுத்து ஒரு நூலாக வெளி­யிட்டேன். 

ஆனால், எதிர்­பா­ராத வகையில் கவி­தை­க­ளுக்கு சிறந்த வர­வேற்பும்,பாராட்­டுக்­களும் கிடைத்­தி­ருந்­தது.

யாப்­பி­லக்­க­ணங்­களை பின்­பற்றி மரபுக் கவி­தைகள் படைக்­கப்­பட்­டாலும் தற்­கால சமூ­கத்­திற்கு நாம் கூற­வேண்­டிய விட­யங்­களை புதுக்­க­வி­தைகள்  மூலம் இல­கு­வாக சொல்­லி­வி­டலாம் என்­பது படைப்­பா­ளி­களின் கருத்து அதே­போல புதுக்கவிதைகளில் சில­வ­ரி­களே காணப்படுவதால் அதை புரிந்­து­கொள்ளக் கூடி­ய­தாக இருத்தல் வாச­கர்­களின் தரப்பில் வெளிப்­ப­டுத்­தப்­ப­டு­வதே இதற்கு காரணம் என நினைக்­கின்றேன்.

 கேள்வி: உங்கள் நாவல், சிறு­கதை மற்றும் கவி­தை­களில் சிறு­வர்­களின் ஆதிக்கம்   அதி­க­மாக இழை­யோ­டி­யுள்­ளதை காணக்­ கூ­டி­ய­தாக இருக்­கின்­றது இது­பற்றி கூற­ முடி­யுமா?
உண்­மைதான். எனது சேவை காலத்தில் இறு­திக்­கட்டம் 5–-10 வய­து­வ­ரை­யான சிறு­வர்­க­ளு­டனேயே செல­வி­டப்­பட்­டது.

அது என் ஆசி­ரியர் சேவையின் ஒரு வசந்த காலம். மழ­லை­களின் மொழி, அவர்­களின் குறும்­புத்­த­னங்கள் என்­பன தனி­யான உலகம். அதற்குள் நாம் இருக்­கின்றபோது மனம் மகிழ்­வாக இருக்கும்.      
 
எனக்கு இந்த சந்­தர்ப்­பங்கள் கிடைத்­தமை பெரும் அதிஷ்டம். இந்த சிறு­வர்­களின் அனு­ப­வங்­களை கொண்டு நான் “வாருங்கள் கதை படிப்போம்” எனும் சிறுவர் கதை தொகுப்­பையும், மாண­வர்­க­ளுக்கு மணிக்­க­வி­தைகள் எனும் சிறுவர் பாடல் தொகுப்­பையும் வெளி­யிட்­டுள்­ள­துடன், சிறு­வர்கள் மீதுள்ள அதீத பிரியம் கார­ண­மாக எனது ஏனைய வெளி­யீடு­க­ளிலும் சிறுவர் பாத்­தி­ரங்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கொடுத்­து­ வந்­துள்ளேன். 

கேள்வி: தற்­கால சமூ­கத்­தினர் மத்­தியில் வாசிப்­பு­ப்ப­ழக்கம் குறை­வ­டைந்து செல்­வ­தாக   உள்­ளது. இது பற்றி உங்கள் கருத்து என்ன?
இதற்­கான பதிலை இரண்­டொரு வரி­களில் கூற முடி­யாது. இளஞ்­சந்­த­தி­யி­னரின் வாசிப்­புத்­தன்மை சற்றுக் குறை­வ­டைந்து இருப்­பது உண்­மைதான்.

இதில் சுட்­டு­விரல் அங்கே காட்­டினால் ஏனைய விரல்கள் எம்மைக் காட்டும் நிலைதான்.  
 
பிள்­ளைகள் வாசிப்பில் ஆர்வம் கொள்­ளக்­கூ­டிய வயதில் வாசித்து மன­நி­றை­வ­டை­யக்­கூ­டிய பரு­வத்தில் புத்­த­கங்­களை வாசிக்க ஏது நேரம்? 

பாடப்­புத்­த­கங்­களை தோளிலும் பரீட்சைப் பயத்தை மன­திலும் சுமந்து பாட­சாலை, பிரத்­தி­யேக வகுப்­புக்கள் என ஓடித்­தி­ரி­கின்­றார்கள். இதே­வேளை வீட்டில் பெற்றோர் அவர்­க­ளுக்கு ஏற்ற புத்­த­கங்கள், சஞ்­சி­கைகள் மற்றும் பத்­தி­ரிகைகள் என வாங்கிக் கொடுத்து அவர்களுக்கு வாசிக்கும் சூழலை நம்மில் எத்­தனை பேர் ஏற்­ப­டுத்திக் கொடுக்­கின்றோம்? 

இதே­வேளை அதி­க­மான பாட­சா­லைகளில்  நூல­கங்கள் இருக்­கின்ற போதும் அங்கு நிறை­வாக புத்­த­கங்­களும் உள்­ளன.

சில பாட­சா­லைகளில் நேர­சூ­சி­யிலும் நூலக வாசிப்­புக்­கான நேரம் ஒதுக்­கப்­பட்­ட­போ­திலும் அது எந்­த­ளவில் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வது என்­பது ஒரு கேள்­வி­யாக உள்­ளது.

சிறு­வ­ய­தில் வாசிப்பை நேசித்த பிள்­ளைகள் என்­னதான் தொழி­ல்நுட்ப சாத­னங்கள் கையாண்­ட­போதும் வாசிப்பை கைவி­ட­மாட்­டார்கள்.

உதா­ர­ண­மாக எனது சேவைக்­கா­லத்தில் பாட­சா­லையில் “பொப்­லெப்”­ எனும் வாசிப்பு மேம்­பாட்டு திட்டம் மாண­வர்கள் மத்­தியில் அமோ­க­ வ­ர­வேற்பைப் பெற்­றது.

அந்த நிகழ்ச்சி திட்­டத்தில் ஈடு­பட்ட மாண­வர்கள் தற்­போது இளை­ஞர்­க­ளாக பல­து­றை­களில் பணி­பு­ரிந்த போதும் சிறந்த வாசிப்­பா­ளர்­க­ளாக இருக்­கின்­றார்கள் என்­பதை மன­நி­றை­வுடன் கூறிக் கொள்­கின்றேன்.

இவ்­வாறு தொடர் வாசிப்பு பழக்கம் அவர்­களை நிறை­ம­னி­தர்­க­ளாக மாற்றும் என்­பது சந்­தே­க­மில்லை.
 
கேள்வி: விரு­துகள், கௌர­விப்­புக்கள் பற்றிய உங்கள் கருத்து என்ன?
இது சற்று சங்­க­ட­மான கேள்வி. அறி­முகம், பிர­பலம் மற்றும் சமூக அந்­தஸ்து ஆகிய கார­ணங்­க­ளுக்­காக விரு­து­களோ, பரி­சு­களோ அல்­லது பாராட்­டுக்­களோ கொடுப்­பதும், பெற்றுக்கொள்­வதும் அரு­வ­ருப்­பான செயல்கள் என்­பதே எனது கருத்து.

இருந்தும் இவற்­றையும் தாண்டி மிக நேர்த்­தி­யான முறையில் இச் செயற்­பா­டுகள் இடம்­பெ­று­வதும் உண்டு.

உதா­ர­ண­மாக என்னை ஒரு இலக்­கிய படைப்­பா­ளி­யென யாரும் அறிந்­தி­ராத கால­கட்­டத்தில் சர்­வ­தேச ரீதியில் எனது தொடரும் ஜன­னங்கள் சிறு­க­தைக்கு முதற்பரிசு கிடைத்­த­போது வட­பு­லத்தைச் சேர்ந்த பிர­ப­ல­மான ஒரு எழுத்­தாளருடைய சிறு­க­தைக்­காக மூன்றாம் பரிசு கிடைத்­தது.

இந்த இடத்தில் அறி­முகம், பிர­பலம்,சமூக அந்­தஸ்து நுழை­ய­வில்­லையே? ஏதோ அங்­கொன்றும்,இங்­கொன்­று­மாக சில முறை­கே­டு­கள் நடந்­தாலும் அவை­களும் தவிர்க்­கப்­பட வேண்டும் என்­பது எனது விருப்­ப­மாக இருக்­கின்­றது.    

எது எவ்­வாறு இருந்­த­போதும் ஒரு படைப்­பா­ளிக்கு கிடைக்கும் பரி­சு­களும், விரு­து­களும் தமது படைப்­பு சமூகத்தால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது என்ற நம்­பிக்­கையைக் கொடுப்­ப­துடன் அவரின் எழுத்­துத்­து­றை முன்­னெ­டுப்­புக்கு சக்­தி­யா­கவும் அமைந்­துள்­ளது என்­பதே உண்மை.

கேள்வி: வளர்ந்து வரும் இளம் எழுத்­தா ளர்­க­ளுக்கு நீங்கள் கூறும் அனு­பவ ரீதி­யான   ஆலோ­சனைக் கருத்துக்கள் என்ன?
தற்காலம் பல நவீன தொழில்நுட்ப வசதி வாய்ப்புக்கள் நிறைந்த காலம்.

இதனை அவர்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.

நல்ல நூல்களை தேடி வாசிக்க வேண்டும்.புதிய சிந்தனைகளை உள்ளெடுத்து சமூகத்திற்கு சிறந்த சிந்தனை மாற்றம் கொண்ட கருத்துக்களை, படைப்புக்களை கொடுக்க வேண்டும்.

நிறைய தேடி வாசிப்பதனால் அவர்களின் எழுத்து நடை செம்மையாகும், படைப்புக்கள் கனதியுள்ளதாக அமையும்.

எழுத்துத்துறை யென்பது புனிதமானது. இதனை எழுத்து தர்மம் என்பர்.

அந்த எழுத்து யாரையும் நேரடியாக சுட்டிக்காட்டுவதாக இருக்கக்கூடாது என்பதுடன் இன்னு மொருவரின் படைப்பைத் திருடி தன்படைப்பாக வெளிக்கொணர்வது தவிர்க்கப்பட வேண்டும்.
 

இலக்கிய படைப்புக்களானது ஒரு சமூகத்தின் இருப்பை அடுத்து  வரும் சந்ததினருக்கு  எடுத்துச் செல்லும் வகையில் படைக்கப்பட வேண்டும்.என்பது எனது விருப்பமாக இருக்கின்றது.